தெரியுமா?: கிருஹப்ரவேஷ் - பிராபர்ட்டி கண்காட்சி
இந்தியாவில் வீடு, மனை வாங்க விரும்புவோருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பைக் கொண்டுவருகிறது இந்தியா பிராபர்ட்டி டாட் காம். அமெரிக்காவில் 9வது முறையாக இந்தக் கண்காட்சி 3 நகரங்களில் ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த 20 பில்டர்களின் 80 கட்டுமானத் திட்டங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறது இந்தக் கண்காட்சி. அஹமதாபாத், அமராவதி, பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், கோவா, குர்காவுன், ஹைதராபாத், கொச்சின், கொல்கத்தா, மங்களூரு, மும்பை, மைசூரு, நாக்பூர், நோய்டா, புனே, வடோதரா, விசாகபட்டினம், வாரங்கல் எனப் பெருநகரங்களும், வளரும் நகரங்களும் இதில் அடங்கும்.

அப்ரானா, கனாகியா, ஹிராநந்தானி, பிரிகேட், மந்த்ரி, ப்ரெஸ்டிஜ், கோத்ரெஜ், வெஸ்டர்ன், ஓஸோன் குரூப், மை ஹோம், சத்வா, அலெம்பிக், L&T ரியால்டி, புரவங்கரா, ராம்கி, ஸ்ரீரஸ்து, டிரீம்வேலி உட்படப் பல உயர்தரக் கட்டுமான நிறுவனங்களை நீங்கள் ஓரிடத்தில் சந்திக்க இதுவொரு வாய்ப்பு.

இந்தியாவின் 20 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் சென்னை இருக்கிற காரணத்தால், அங்கே சிறப்பான உள்கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரிங் ரோடுக்கான முதல் கட்டப்பணிகள் அதை அடுத்துள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. NH-205 நெடுஞ்சாலையை NH-5 உடன் இணைக்கும் 6-லேன் விரிவாக்கம் அதன் இருபுறமும் அமைந்த பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது. இந்தப் பகுதிகளில் நெடுநோக்குடன் முதலீடு செய்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். அதுபோல சென்னை மெட்ரோ ரயில் பாதையும் இத்தகைய வளர்ச்சிக்கான சாத்தியத்தை ரயில்நிலையங்களை ஒட்டிய பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது.

GST சாலையை ஒட்டியுள்ள சிற்றூர்களிலும், பெருங்குடி, சோளிங்கநல்லூர், சிறுசேரி ஆகியவைகளிலும் பணிவாய்ப்புகள் பெருகியதால், இவ்விடங்களில் வசிப்பிடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. நல்ல சாலை மற்றும் பிற வசதிகளின் பெருக்கத்தால் இங்கே கடந்த சில வருடங்களில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இந்த ஏப்ரல் மாதம் கிருஹப்ரவேஷ் கண்காட்சிக்கு அவசியம் வாருங்கள். நீங்கள் செய்யும் நல்ல முதலீடுகள் உங்களை மேலும் வளப்படுத்தும். நடக்கவிருக்கும் இடம் மற்றும் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தேதிஇடம்
ஏப். 15 & 16Marriott Schaumburg Hotel, Chicago
ஏப். 22 & 23Santa Clara Convention Center, Santa Clara, CA
ஏப். 29 & 30Irving Convention Center, Dallas


எல்லா இடங்களிலும் இரண்டு நாட்களிலுமே காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை கண்காட்சி திறந்திருக்கும். அனுமதி இலவசம்.

அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்பவர்களுக்குச் சலுகைகளையும் பில்டர்கள் தரவுள்ளனர். இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com