விலை....
எனக்கு வேண்டாதவை
உனக்கு வேண்டியவை ஆயின
எனக்கு வேண்டியவை
உனக்கு வேண்டாதவை ஆயின...

உனக்கு வேண்டியதை நீயும்
எனக்கு வேண்டியதை நானும்
தேடிப் பெற்றபோது
நாம் இருவரும்
ஒருவருக்கொருவர்
வேண்டாதவர் ஆகிப்போனோம்!

அருணா சுப்ரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com