பள்ளி பருவத்திலே


பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுமாகும் படம் பள்ளி பருவத்திலே. நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் கே.எஸ். ரவிகுமார், ஊர்வசி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, பேராசிரியர் கு. ஞானசம்பந்தம், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து, வாசு கோகிலா, எம்.ஜி. சாரதா எழுத, இசையமைக்கிறார் விஜய் நாராயணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வாசுதேவ் பாஸ்கர். "நிஜ சம்பவங்களின் தொகுப்பே படத்தில் கதையாகி உள்ளது. கிராமத்துப் பின்னணியில் காமெடி கலந்த படமாக உருவாகிறது" என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com