நீ பாட்டுக்கு கார்ல ஊரைச் சுத்திகிட்டிருக்கே?
டாக்டர்: உங்க குழந்தை ரொம்ப அழகாயிருக்கு.

பிரசவித்தவர்: போங்க டாக்டர், நீங்க எந்த குழந்தையப் பார்த்தாலும் இப்படித் தான் சொல்லுவீங்க போல. ஒரு வேளை சுமாராயிருந்தா என்ன சொல்லுவீங்க?

டாக்டர்: அப்படியே உங்களையே உறிச்சி வைச்சிருக்குன்னு சொல்லி சமாளிப்பேன்.

*****


அம்மா, நான் பேப்பர்ல 'அழகான வாலிபர் தேவை, அமைதி நாடுபவரும், விட்டுக்கொடுக்கும் மனோபாவமும், நகைச்சுவை உணர்வும், உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்னு' விளம்பரம் பண்ணினேனில்ல, அதுக்கு ஒரே ஒரு ஆளு மட்டும் அப்ளை பண்ணியிருக்கார்.

அப்படியா! யாரு?

எல்லாம் நம்ம அப்பாதான்!

*****


திருடன்: வக்கீல் அய்யா! ரொம்ப நன்றிங்க. அந்த கொள்ளை கேசி லிருந்து, சூப்பரா என்ன காப்பாத்திட் டீங்க. நான் அப்புறமா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்.

வக்கீல்: சரி, சரி! ராத்திரியா இல்லாம, நான் வீட்டில இருக்கும் போது பகல்லியே வா.

*****


பெட்ரோல் விலை ரொம்ப அதிகமாய் கிட்டே இருக்கு! நீ பாட்டுக்கு கார்ல ஊரைச் சுத்திகிட்டிருக்கே?

எதுக்கு கவலைப்படணும்? நான் எப்பவுமே இருவது டாலருக்குதானே பெட்ரோல் போடுவேன்.

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com