விஸ்வசாந்தி வழங்கும் 'Infinite Facets'
ஃபிப்ரவரி 12, 2017 ஞாயிற்றுக் கிழமையன்று விஸ்வசாந்தி நாட்டியக்குழு (Vishwa Shanthi Performing Arts) "Infinite Facets" என்னும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறது. இந்தக் குழு, உலகளாவிய அமைதியும் சமாதானமும் வளர இந்நிகழ்ச்சியை அர்ப்பணிக்கிறது. கடவுள் பல வடிவங்களை எடுத்தபோதும், அனைத்துப் பரிமாணங்களும் ஒரே இறைப்பொருளில் ஒன்றுபடுகின்றது. இதனையே இந்த மாறுபட்ட ஆன்மீக நடன நிகழ்ச்சி சித்திரிக்கிறது.

விரிகுடாப்பகுதியின் பிரபல கலைஞர் திருமதி. ஆஷா ரமேஷ் அவர்களின் இசையமைத்துள்ளார். திரு. ரோஹித் ஜெயராமன், திரு. ரவீந்திர பாரதி ஸ்ரீதரன், திரு. அஷ்வின் கிருஷ்ணகுமார் மற்றும் திரு. விக்ரம் ரகுகுமார் ஆகிய கலைஞர்கள் அவரோடிணைந்து பாடல்களை இசைத்து வழங்கியுள்ளனர்.

நாள்: Feb 12th, 2017, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மதியம் 12 மற்றும் மாலை 4 மணி - இரண்டு காட்சிகள்
அரங்கம்: The Center for Performing Arts at Menlo Atherton High School, 555 Middlefield Rd, Atherton, CA 94027

தகவல்: பிரியா ராஜன்,
ஃபோஸ்டர் சிட்டி, கலிஃபோர்னியா
படம்: Swagatha B. Photography

© TamilOnline.com