ஸ்ரீ கிருஷ்ண விருந்தாவன ஆலயம்: மாத்வ நவமி
ஃபிப்ரவரி 4, 2017, சனிக்கிழமையன்று உடுப்பி புத்திகே மடத்தின் ஸ்ரீ கிருஷ்ண விருந்தாவன ஆலயம் 'மாத்வ நவமி' கொண்டாடுகிறது. நடைபெற இருக்கும் முகவரி: 43 Sunol St., San Jose, CA. காலை 7 மணிக்கு ஹோமம் மற்றும் பூஜையுடன் தொடங்கும் இந்த விழா அன்றிரவு 8 மணிக்குத் தொட்டில் பூஜையுடன் நிறைவெய்தும். மாலை 5:30 மணிக்கு ஸ்ரீ மத்வாசார்யரின் மீது சொற்பொழிவு நடைபெறும். பூர்ணபிரக்ஞர் மற்றும் அனந்த தீர்த்தர் என அறியப்படும் ஸ்ரீ மத்வாசார்யர், துவைத தத்துவத்தை நிறுவினார்.

ஃபீனிக்ஸ், லாஸ் ஏஞ்சலஸ், ஹூஸ்டன், நியூ ஜெர்சி, டொராண்டோ (கனடா) ஆகிய இடங்களிலுள்ள விருந்தாவன ஆலயங்களிலும் மாத்வ நவமி நிகழ்ச்சிகள் நடைபெறும் தகவலறியத் தொலைபேசி எண்: 408-416-3624.

இந்த ஆலயத்தில் துவைதத்தின் முக்கிய தெய்வமான உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் பிரதானமாக வழிபடப்படுகிறார். தவிர 'மிருத்திக பிருந்தாவன' வடிவில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியும், ஸ்ரீ ஹனுமானும் இங்கு வழிபடப்படுகின்றனர்.

நார்சி கஸ்தூரி,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com