சதுர அடி 3500


நிகில் மோகன் நாயகனாகவும், ஸ்வாதி தீக்ஷித் நாயகியாகவும் நடிக்கும் படம் சதுர அடி 3500. இவர்களுடன் ரகுமான், பிரதாப் போத்தன்,, இனியா, கோவை சரளா, மனோபாலா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நா. முத்துகுமார் எழுதிய பாடல்களுக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்டீபன். "சென்னையில் நடைபெற்ற ஒரு திகில் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. திகிலுடன் காதலையும் புதிய கோணத்தில் திரைக்கதையாக்கி இருக்கிறோம்" என்கிறார். காதலே ஒரு திகில்தானேங்கறாரு கோலிவுட்டார்.

அரவிந்த்

© TamilOnline.com