ஒத்தைக்கு ஒத்த


சிறிய இடைவெளிக்குப் பின் அதர்வா நாயகனாக நடிக்கும் படம் ஒத்தைக்கு ஒத்த. ஒரு முன்னணி நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் தியாகராஜன், நரேன் நடிக்கின்றனர். இயக்குநர் ரஞ்சித்தின் உதவியாளராக இருந்த பர்னீஷ் இயக்குகிறார். "மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, அவர்களுள் யார் வலியவன் என்பதில் ஏற்படும் சண்டைகள் மற்றும் காதல். இந்த மூன்றையும் மையமாக கொண்டு நகர்கிறது ஒத்தைக்கு ஒத்த" என்கிறார் இயக்குநர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com