குற்றம் 23
அருண் விஜய் நாயகனாகவும், மஹிமா நம்பியார் நாயகியாகவும் நடிக்கும் படம் குற்றம் 23. விவேகாவின் பாடலுக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ராஜேஷ்குமாரின் கதை வசனத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை அறிவழகன் இயக்கியிருக்கிறார். காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் அருண் விஜய். இது மருத்துவக் கிரைம்-த்ரில்லர் கதை. அருண்விஜய் நடிக்கும் 23வது படம். வித்தியாசமான அருண் விஜயை இப்படத்தில் பார்க்கலாம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com