கிரான்பெர்ரி தொக்கு
தேவையான பொருட்கள்

கிரான்பெர்ரி - 1 பெரிய கிண்ணம்
மிளகாய்ப் பொடி - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
ந. எண்ணெய் - 1 கிண்ணம்
மஞ்சள்பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்த கிரான்பெர்ரியைப் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, மூடிவைத்து, 5 நிமிடம் கழித்து கரண்டியால் மசித்துக் கிளறவும். நன்றாக மசிந்து வரும்போது மிளகாய்ப் பொடியைப் போட்டுக் கிளறவும். காயெல்லாம் மசிந்து, எண்ணெய் ஓரங்களில் கசிந்து கொதிக்கும் போது இறக்கி வைக்கவும். இது மிகவும் சுவையான தொக்கு.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com