தப்பு தண்டா


கறுப்புப் பணத்தைக் கோடி கோடியாய்ப் பதுக்கி வைக்கிறார்கள் சிலர். அதனை நான்கு இளைஞர்கள் கொள்ளையடித்தால் என்னவாகும் என்பதைச் சொல்ல வருகிறது தப்பு தண்டா. சத்யா – சுவேதா கய் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, முக்கிய வேடங்களில் மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ், ஈ. ராமதாஸ், மெட்ராஸ் ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கியிருக்கிறார். நரேன் பாலகுமார் இசை. "தேர்தல், நான்கு திருடர்கள், கதாநாயகியின் காதல் என மூன்று வெவ்வேறு கதைக்களங்களில் திரைக்கதை நகரும். முதல் பாதியை நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியை கிரைம் த்ரில்லராகவும் உருவாக்கி இருக்கிறோம்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com