ஓடு ராஜா ஓடு


சாருஹாசன், நாசர், குரு சோமசுந்தரம், ஆனந்த்சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், சோனா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓடு ராஜா ஓடு'. டோஷ் இசையமைக்க, நிஷாந்த் ரவீந்திரன் திரைக்கதை எழுதி, ஜதின் ஷங்கர் ராஜுடன் இணைந்து இயக்குகிறார். "நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதைதான் படம். நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு உண்டு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இந்த நால்வரும் ஒருவரையொருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது இப்படம்" என்கிறார் நிஷாந்த். படம் நல்லா ஓடட்டும், ராஜா!

அரவிந்த்

© TamilOnline.com