வண்டி


விதார்த், சாந்தினி தமிழரசன் ஜோடி நடிக்கும் படம் வண்டி. கணேஷ் பிரசாத் மற்றொரு கதாநாயகன். கிஷோர், ஜான் விஜய், ஸ்ரீராம் கார்த்திக், மதன்பாப், சாமிநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வில்லனாக அருள்தாஸ் நடிக்கிறார். பாடல்களை சிநேகன், கானா பாலா ஆகியோர் எழுத, இசையமைக்கிறார் சுராஜ் எஸ். குரூப். எழுதி, இயக்குகிறார் ராஜேஷ் பாலா. நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com