மதுரகவீஸ்: 'கண்ணன் கழலிணை'
அக்டோபர் 22, 2016 அன்று சியாட்டில் நகரத்தில் 'மதுரகவீஸ்" குழுவினர் 'கண்ணன் கழலிணை' என்ற தமது இரண்டாவது நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கண்ணபிரானின் திரு அவதார சரித்திரமும் அதன் இன்றியமையாமையும் குறித்து திருமதி. மயூரவல்லி ஆங்கிலத்தில் உபன்யாசம் செய்தார். துணையாக இசைக்குழுவினர் பாடல்களை இசைத்தனர். பாடல் குழுவினர்: திருமதி. நம்ரதா, குமாரி. நிரஞ்சனா, குமாரி. சுப்ரஜா, திருமதி ராஜி, திருமதி. நிவேதிதா மற்றும் திருமதி. வீணா. திரு. சனத் குமார் மிருதங்கமும், திருமதி. அபர்ணா வயலினும் வாசித்தனர்.

கண்ணன் பிறந்த தருணத்தை மயூரவல்லி விளக்கும் தறுவாயில், இசைக்குழுவினர் அந்தக் கட்டத்தை தத்ரூபமாகக் கண்முன் கொண்டு வந்தனர். கம்சனின் கடுங்காவலென்னும் கருத்தைப் பிழைப்பித்து ஓரிரவில் கோகுலம் அடைந்த அம்மாயனின் கீர்த்திக்குப் பல்லாண்டு பாடினர். இறுதியில் கண்ணன் பிறந்து சாதித்ததை, வரையிடமுடியாத அவன் பெருமையை, "மதுரகவீஸ்" குழுவினர் எல்லோர்க்கும் எளிதில் விளங்குகிற வண்ணம், வர்ணித்து நிகழ்ச்சியை நிறைவுசெய்தனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com