ATEA: தொழில்முனைவோர் சந்திப்பு
டிசம்பர் 3, 2016 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு மில்பிடாஸ் ICC-யில், வெற்றிகரமான இரண்டு தொழில்முனைவோருடன் சந்திப்பு மற்றும் விருந்தை அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் திரு. குமார் ரங்கராஜன் (முகநூல்) மற்றும் கார்த்திக் ராமஸ்வாமி (ட்விட்டர்) ஆகியோர் தமது வெற்றிப்பயணத்தைப் பகிர்ந்துகொள்வர். 2014ம் ஆண்டில் முகநூலோடு இணைந்த Little Eye Labs நிறுவனத்தின் இணைநிறுவனர் ஆவார் குமார். கார்த்திக், ட்விட்டரோடு இணைந்துவிட்ட Locomotix நிறுவனத்தின் இணைநிறுவனர். தற்போது டிவிட்டரில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேலாளராக இருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு: www.ateausa.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com