மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை
நவம்பர் 20 முதல், 29ம் தேதிவரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் உள்ள சான் ஹோசே மற்றும் மிச்சிகனில் உள்ள டெட்ராயிட் ஆகிய இடங்களுக்கு வருகைதர இருக்கிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' என்று அழைக்கிறார்கள். மனித இனத்தின் சேவைக்குத் தமது வாழ்நாளை அம்மா அர்ப்பணித்துள்ளார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
டெட்ராயிட், மிச்சிகன் 11.20 - 11.23
Detroit Marriott at the Renaissance Center, Detroit

சான் ஹோசே, கலிஃபோர்னியா 11.25 - 11.29
Fairmont Hotel, San Jose

இவ்விடங்களில் இலவசப் பொதுநிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீகமுகாம்கள் நடைபெற உள்ளன. பொதுநிகழ்ச்சியில் அம்மாவின் தரிசனம், சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீகமுகாமில் (retreat), ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா ஆற்றிவரும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.EmbracingTheWorld.org
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com