தங்கரதம்


வெற்றி நாயகனாகவும், நீரஜா நாயகியாகவும் நடிக்கும் படம் தங்கரதம். முக்கிய வில்லன் வேடத்தில் சௌந்திரராஜா நடிக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுத, டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பாலமுருகன். "ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிவரும் வேலையைச் செய்கிறார் நாயகன். இவருக்கும் இன்னொரு கும்பலுக்கும் நடக்கும் தொழில் போட்டி, எப்படி விபரீதமாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் இயக்குநர். அதிரடிப் படம்தான்.

அரவிந்த்

© TamilOnline.com