இவன் தந்திரன்


நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பின் நாயகனாக நடிக்கும் படம் இவன் தந்திரன். நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமாகிறார். R.J. பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். எஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் செல்ஃபோன் கடை வைத்திருக்கிறார் நாயகன். பாலாஜியும் எஞ்சினியரிங் படித்துவிட்டு ஆட்டோ ஓட்டுகிறார். நாயகன் விளையாட்டாய் ஒரு 'மீம்' வெளியிட அதன் விளைவு என்ன ஆனது, எப்படி தங்கள் தொழில்நுட்ப அறிவால் நண்பர்கள் இருவரும் அந்தச் சிக்கலில் இருந்து மீண்டார்கள் என்பதைச் சொல்கிறது இந்தப்படம். ஆக்‌ஷன் + நகைச்சுவை கலந்த இப்படத்தை கண்ணன் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com