தெரியுமா?: மவுண்டன் ஹவுஸ் தமிழ்ப் பள்ளி (Mountain House Tamil School)
உலகத் தமிழ்க்கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ்ப்பள்ளி ஒன்று மவுன்டன் ஹவுஸ் நகரத்தில் இம்மாதம் துவங்குகிறது. மவுன்டன் ஹவுஸ் (Mountain House) நகரம் ட்ரேஸி மற்றும் லிவர்மோருக்கு இடையே உள்ளது.

இந்தத் தமிழ்ப்பள்ளி நவம்பர் 13ம் தேதி துவங்கும். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 10 முதல் 11:30 மணிவரை வகுப்புகள் நடைபெறும். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இதில் சேரலாம். தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமுள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றனர். ட்ரேஸி, ஸ்டாக்டன் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களும் முன்வரலாம். அரசு பொதுப்பள்ளி ஒன்றில் வகுப்புகள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு:
திருமதி. தீபா ரமேஷ் - 408.261.9647; mhtamilschool@gmail.com

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com