விதி மதி உல்டா


மனிதன் கனவில் காணும் காட்சியெல்லாம், நிஜமாக நடந்தால், கனவில் காண்பவர்கள் நிஜமாக நேரில் வந்தால் எப்படி இருக்கும்? ஒருவேளை இதுதான் 'விதி' என்றால் அந்த விதியை வெல்ல முடியுமா? இதைக் கருவாக வைத்து உருவாகிவரும் படம் விதி மதி உல்டா. ரமீஸ் ராஜா நாயகனாக நடிக்க, ஜனனி ஐயர் நாயகியாக நடிக்கிறார். டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், கு. ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வின் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் விஜய் பாலாஜி. காதல், காமெடி, ஃபேன்டஸி கலந்த திகில் படம் இது. விதியா, மதியா!

அரவிந்த்

© TamilOnline.com