அதாகப்பட்டது மகா ஜனங்களே


தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகும் படம் இது. ரேஷ்மி ரத்தோர் நாயகியாக அறிமுகமாகிறார். மனோபாலா, பாண்டியராஜன், நரேன், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி எழுத, டி. இமான் இசையமைக்கிறார். எழுதி இயக்குகிறார் இன்பசேகரன். நகைச்சுவை கலந்த த்ரில்லர் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. தம்பி ராமையா மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறாராம். அதாகப்பட்டது, நல்லா இருந்தாச் சரிதான்!

அரவிந்த்

© TamilOnline.com