தெரியுமா?:சத்குருவின் வட அமெரிக்கப் பயணமும் புத்தக வெளியீடும்
உலகப்புகழ் பெற்ற யோகியான சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் வரும் இலையுதிர் காலத்தில் வட அமெரிக்காவின் 17 நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அக்டோபர் 2ம் தேதியன்று சான் ஹோஸே, கலிஃபோர்னியாவுக்கு வருகை தருகிறார். (பயண விவரங்களை அறிய)

அப்போது சத்குரு முன்னிலை நமது உண்மையான இயல்புகளான, சுதந்திர நிலை, அன்பு, அளவற்ற மகிழ்ச்சி இவற்றை உணரகூடிய ஒரு உன்னத வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அவரைச் சந்தித்து, அவருடன் சேர்ந்து தியானம் செய்யவும், சந்தேகங்களுக்கு விடை காணவும் இதுவொரு சந்தர்ப்பம். சத்குரு மனிதகுலத்தின் உடல், மன, ஆன்மீக மேம்பாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். பாரம்பரியங்களைக் கடந்த தமது போதனைகளில், யோக சாஸ்திரத்தின் அம்சங்களை இன்றைய வாழ்க்கைமுறைக்கு ஏற்பப் புகுத்தியுள்ளர்.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 1992ல் தொடங்கப்பட்டது இவரது ஈஷா ஃபவுண்டேஷன். இது உலகமுழுதும் மனிதநேயம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மேற்கத்திய வாசகர்களுக்கான அவரது முதல்நூல் Inner Engineering: A Yogi's Guide to Joy (Spiegel & Grau Hardcover, 2016) வெளியிடப்படும். யோக தத்துவங்கள் காட்டும்வழியில், சுய அதிகாரமடைய (self-empowerment) உதவும் நூதன வழிகாட்டி இந்நூல். இது உள்ளச் சமநிலையை அடைவதற்கான ஆதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து, மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். யோகம் என்பது நமது விதியை நாமே நிர்ணயம் செய்ய உதவும் அநுபவ அறிவியல் என்பது இவரது கூற்று. உள்ளார்ந்த ஆனந்த நிலையை அடைய அது நமக்கு உதவுகிறது. நூலைப்பற்றி மேலும் அறிய. இந்நூலைப் பற்றி சர். கென் ராபின்ஸன் "நம்மை உன்னத வாழ்க்கை வாழ அழைக்கும் ஓர் அன்பான அழைப்பிதழ்" என்கிறார். தீபக் சோப்ரா "நீங்கள் தயார் நிலையில் இருந்தால், இப்புத்தகம் பிரபஞ்சத்தை அறிய உதவுவதான உங்கள் உயர்வான உள்ளறிவைத் தட்டி எழுப்பும்" என்று கூறுகிறார்.

"இந்நூலில் நமது அறிவுக்குச் சவால்கள் பல உள்ளன. தன்னை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இதைப் படிக்க வேண்டும்" என்கிரார் மார்க் ஹைமான் (MD, Director, Cleveland Clinic Center for Functional Medicine, and New York Times bestselling author).

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com