கணிதப் புதிர்கள்
1) 5, 7-3, 5-8-2, 9-6-4-?....

கேள்விக்குறி உள்ள இடத்தில் வரவேண்டிய எண் எது, ஏன்?

2) 1,7,7,7 இந்த எண்களைப் பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ விடை நூறு வருமாறு செய்யவேண்டும். இயலுமா?

3) அது ஒரு ஐந்து இலக்க எண். முதல் எண்ணின் பாதி இரண்டாம் எண். முதல் எண்ணைப்போல இருமடங்கு மூன்றாம் எண். முதல் எண்ணுடன் ஒன்றைச் சேர்த்தால் நான்காம் எண் கிடைக்கும். மூன்றாம் எண்ணிலிருந்து ஒன்றைக் கழித்தால் ஐந்தாம் எண் கிடைக்கும். அந்த ஐந்து இலக்க எண்களின் முன் எண் ஒன்றைச் சேர்த்தால் வரும் விடை, அதே ஐந்து இலக்கங்களின் பின்னால் ஒன்றைச் சேர்த்தால் வரும் எண்ணின் மூன்று மடங்காகிறது என்றால் அந்த எண் எது?

4) 37, 48, 57, 64, ..., ... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண்கள் எவை, ஏன்?

5) 101 - 102 = 1

கணிதக்குறியீடுகளை மட்டும் பயன்படுத்தி, எண்களை வரிசை மாற்றாமல் இந்தக் கணக்கைச் சரிசெய்ய முடியுமா?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com