பொட்டு


பரத் நாயகனாகவும், நமீதா, இனியா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கும் படம் பொட்டு. முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், சாமிநாதன், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வடிவுடையான் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். பாடல்களை விவேகா, நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இசை: அம்ரிஷ். படம்பற்றி இயக்குநர், "பரபரப்பான பேய்ப்படம் இது. மருத்துவக் கல்லூரிப் பின்னணியில் நடப்பது" என்கிறார். படத்தில் பரத் பெண் வேடத்தில் தோன்றுகிறார் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com