கணிதப் புதிர்கள்
1) அது ஒரு நான்கு இலக்க எண். அந்த எண்ணை 9ல் வகுத்தால் மீதி எட்டும், எட்டால் வகுத்தால் மீதி ஏழும், 7ல் வகுத்தால் மீதி ஆறும், 6ல் வகுத்தால் மீதி ஐந்தும் எனத் தொடர்ந்து இறுதியில் 2ல் வகுத்தால் மீதி ஒன்று வருகிறது. அந்த எண் எது?

2) 0 முதல் 9 வரையுள்ள அனைத்து இலக்கங்களையும் கணிதக் குறியீடுகளையும் பயன்படுத்தி விடை 1 வரச்செய்ய இயலுமா?

3) ஒரே வகையான ஐந்து இலக்கங்களையும், கணிதக் குறியீடுகளையும் பயன்படுத்தி விடையாக நூறு வரச்செய்யுங்கள் பார்க்கலாம்.

4) வரிசையில் அடுத்து வரவேண்டிய எண்கள் எவை, ஏன்?

52, 54, 58, 66, 72, ..., ...., .... ?

5) அது முன்னூறுக்குள் உள்ள ஒரு மூன்று இலக்க எண். முதல் எண்ணின் சரிபாதி இரண்டாம் எண். முதல் எண்ணின் இருமடங்குடன் இரண்டாம் எண்ணைக் கூட்ட மூன்றாம் எண் கிடைக்கும். மூன்றையும் கூட்டினால் எட்டு வரும். ஐந்தால் வகுபடக் கூடிய அந்த எண் எது?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com