TNF: ஒஹையோவில் நெடுநடை
ஆகஸ்ட் 14, 2016 அன்று நடுவண் ஒஹையோ கிளையின் நெடுநடை (Walkathon) இரண்டாவது ஆண்டாக நடக்கவுள்ளது. இது நாகப்பட்டினம் TNF-ABC திட்டத்திற்கு நிதிதிரட்டும் நிகழ்வாக அமையும்.

கொலம்பஸ் மாநகரில் இந்த நெடுநடை நிகழ்வு நடைபெறும். இதில் நீங்கள் எடுத்து வைக்கும் ஓவ்வோர் அடியும் தமிழகத்தில் குழந்தைகளின் கல்வித்திறன் வளர்வதற்கான முன்னெடுப்பாக அமையும். வாருங்கள்,

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்.

விவரம்
நிகழ்ச்சி: TNF நடுவண் ஒஹையோ கிளை - நெடுநடை
நாள்/நேரம்: ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016, 8:00AM
இடம்: Glacier Ridge Park, Dublin, Ohio
தொடர்புக்கு: tnf.centralohio@gmail.com
இணையதளம்: tnfusa.org/chapter/central-ohio
முகநூல்: facebook/TNFCentralOhioChapter

மணி பெரியகருப்பன்,
டப்ளின், ஒஹையோ

© TamilOnline.com