மக்செஸே விருது
ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்செஸேயின் நினைவாக 1957 முதல் ஆண்டுதோறும் ரமோன் மக்செஸே விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூகசேவை, கலை, இலக்கியம், அமைதிப் பணிகளில் முன்னோடியாகச் செயல்புரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, டாக்டர் வி.சாந்தா, கிரண்பேடி, டி.என். சேஷன், அன்னை தெரசா உள்ளிட்ட பலர் இந்தியாவில் பெற்றுள்ளனர். இந்த ஆண்டிற்கான விருதினைப் பெறுவதற்கு பெஜவாடா வில்சன், டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுபேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை எதிர்த்து கடந்த 32 ஆண்டுகளாகப் போராடி வருவதற்காகவும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருவதற்காகவும் கர்நாடகாவைச் சேர்ந்த பெஜவாடா வில்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இசை அனைவருக்கும் பரவலாக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, அதற்கான பணிகளை சமீபகாலமாக மேற்கொண்டு வருவதற்காக கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com