லிவர்மோர் HCCC: O.S. அருண் கச்சேரி
ஜூலை 31, 2016 ஞாயிறன்று பிற்பகல் 3:30 மணிக்கு லிவர்மோர் சிவா விஷ்ணு ஆலயத்தின் லக்கிரெட்டி அரங்கில் மதுரகான சிரோன்மணி திரு O.S. அருண் அவர்களின் பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சியை இந்து சமுதாய கலாசார மையம் (HCCC) நடத்தவுள்ளது. இதில் பற்பல இந்தியமொழிகளில் பஜன், அபங் மற்றும் சாஸ்திரீய, மெல்லிசைப் பாடல்கள் இடம்பெறும்.

இவருடன் பக்கவாத்தியம் வாசிக்க இருப்பவர்கள்: முல்லைவாசல் சந்திரமௌலி (வயலின்), B சிவராமன் (மிருதங்கம்), ஆதம்பாக்கம் சங்கர் (கடம்), செல்வ அமல் ஃபெர்டினன்ட் - தாளம் மற்றும் உதவி.

கலிஃபோர்னியா விரிகுடாவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் இந்துக்களின் சமுதாய, பண்பாடு மற்றும் கலாசார மேம்பாட்டுக்கு உழைக்கும் இந்து சமுதாய கலாசார மையம் (சிவா விஷ்ணு ஆலயம், லிவர்மோர், கலிஃபோர்னியா) 30 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்த ஆலயம் வடகலிஃபோர்னியாவின் லிவர்மோரில் 1986ம் ஆண்டு ஜூலை மாதம் இந்து வேத, ஆகம சிற்ப சாஸ்திரங்களில் நிர்ணயித்த முறைப்படி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்டது. சிறியதாகத் துவங்கிய இந்த மையம் இன்று 12 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரியதாகப் பரந்து வளர்ந்து மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதோடு, கல்வி, கலை மற்றும் மனிதநேய மேம்பாட்டுப் பணிகளிலும் திறம்படச் செயல்படுகின்றது. மையத்தின் 30 ஆண்டுகாலச் சேவையைக் கொண்டாடும் விதமாக, ஜூலை 9, 10 ஆகிய இருநாட்களும் சமய, கலை மற்றும் மனிதவள நிகழ்ச்சிகளை நடத்தியும், ஜூலை 2017 வரையில் பல்வேறு மக்கள் மனமகிழ் பொதுநல நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்கொடை: $500 (இருவர்); $100, $50, $25 (ஒருவர்)

தகவல் மற்றும் டிக்கெட்டுகளைப் பெற
வலைமனை: www.livermoretemple.org

தொலைபேசி: 925.449.6255
உஷா ராமஸ்வாமி - 408.421.5647
ஷ்யாமளா வெங்கடேஸ்வரன் - 408.997.2702
திவ்யா சந்திரசேகரன் - 818.934.2042
ஹரிப்ரியா ஜொன்னலகட்டா - 979.985.4588

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com