பைசா


சென்னையில் குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தும் இளைஞன் ஒருவனின் கதைதான் பைசா. பசங்க, கோலிசோடா, பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீராம் நாயகனாக அறிமுகமாகிறார். ஆரா நாயகியாக அறிமுகமாகிறார். உடன் நாசர், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை நா. முத்துகுமார் எழுத ஜே.வி. இசையமைக்கிறார். தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்குகிறார். விளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கை, காதல், சோகம், சந்தோஷத்தை இப்படத்தில் பார்க்கலாமாம்.

அரவிந்த்

© TamilOnline.com