கபாலி
ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் கபாலி. நாயகியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். உடன் கிஷோர், ஜான் விஜய், தினேஷ், தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை கபிலன், விவேக், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பா. ரஞ்சித் இயக்கியிருக்கிறார். மலேசிய நிழல் உலக தாதாக்களைப் பற்றிய படம் கபாலி. இப்படத்தில் ரஜினி இருவேறு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கிறார். தாதா வாழ்க்கையை விட்டு விலகியிருக்கும் ரஜினி, மீண்டும் தனது மகளுக்காக அந்த உலகத்திற்குள் செல்கிறார். காணாமல் போன தன் மகளை மீட்டாரா, மீண்டும் தாதாவாக மாறினாரா என்பதுதான் கபாலி படத்தின் கதை என்று காதில் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து. ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது இப்படம். கபாலிடா!



அரவிந்த்

© TamilOnline.com