TNF ஒஹையோ: ஆதரவாளர் சந்திப்பு
ஏப்ரல் 17, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளையின் (TNF-Central Ohio Chapter) ஆதரவாளர் சந்திப்பு நடந்தேறியது. இந்தக் கிளையின் ஆதரவோடு நாகப்பட்டினத்தில் நடந்துவரும் TNF-ABC திட்டத்தின் விவரங்களைக் கேட்ட அவர்கள் தமது நன்கொடை சீரிய முறையில் பயன்படுவதை அறிந்து மகிழ்ந்தனர். இதனுடன், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைச் செயல்முறை (college admissions planning) மற்றும் அறிவியல் கண்காட்சி (science fair) விவரங்கள் போன்ற தலைப்புகளில் தன்னார்வத் தொண்டர்கள் விளக்கம் வழங்கினர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் வெள்ளநிவாரணத்திற்குத் திரட்டிய நிதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெற அறக்கட்டளையின் வாயிலாக உதவ முடிவுசெய்திருப்பதாகத் தலைவர் திரு. ஜான் குயிலன் தெரிவித்தார். திரட்டப்பட்ட தொகையான $13,000+ டாலர் அறக்கட்டளையின் கடலூர் மாவட்ட நிவாரணத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

மணி பெரியகருப்பன்,
டப்ளின், ஒஹையோ

© TamilOnline.com