டெலவர்: சங்கீத யக்ஞம்
மே 1, 2016 அன்று முதன்முறையாக வட அமெரிக்காவில் மகாருத்ர சக்தி யக்ஞம் டெலவர் மாகாணத்தில் கொண்டாடப்பட்டது. மகாயக்ஞத்தின் சிறப்பு அம்சமாக இடைவிடாமல் 24 மணிநேர கர்நாடக சங்கீதம் இசைக்கப்பட்டது. இந்த யக்ஞம் உலக அமைதிக்காகக் கொண்டாடப்பட்டது. பிரபல கர்நாடக சங்கீத வித்வான்கள் திருமதி. சுகுணா வரதாச்சாரி, திருமதி. கிரணாவளி வித்யாசங்கர், திரு. திருவாரூர் வைத்தியநாதன், திரு. அஷ்வின் போகேந்தரா, திரு. வி.கே. ராமன் (புல்லாங்குழல்), திரு.K.N. சசிகிரண், திரு. P. கணேஷ், திருமதி. ஸ்மிதா மாதவ் ஆகியோர் இதில் பங்கேற்றனர். மேலும், இளங்கலைஞர்கள் குமாரி. ஐஷ்வர்யா ஶ்ரீனிவாசன், ஹரிஹரன் ரவி, வருண் கணேசன் மற்றும் உள்ளுர்க்கலைஞர்கள், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

வடகரோலினாவின் ராலேயில் நூற்றுக்கு மேலான குழந்தைகள் பங்கேற்ற திருமதி. M.S. சுப்புலட்சுமி அம்மாவின் நினைவு சங்கீத சிம்ஃபனி, சசிகிரண் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

உஷா ராமச்சந்திரன் & ஸ்ரீவித்யா கிடாம்பி,
டெலவர்

© TamilOnline.com