சரஸா நாட்ய அகாடமி: ஆண்டுவிழா
மே 21, 2016 சனிக்கிழமையன்று சரஸா நாட்ய அகாடமி தனது மூன்றாவது ஆண்டுவிழாவை மாசசூஸட்ஸ், ஆன்டோவரிலிருக்கும் சின்மயா மிஷன் கலையரங்கில் நடத்தியது. இதில் 'கோவிந்தம் கோபாலம்' என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கியது. சிறப்பு விருந்தினராக வருகைதந்தவர் திருமதி. பூர்ணிமா ரிஸ்பட், ரஸரங் கலைப்பள்ளியின் நிறுவனர்.

திருமதி ப்ரீத்தி ரமேஷின் மாணவிகள் கண்ணனின் புகழைப் பாடும் முரளி கௌத்துவம், குழலூதி, ஆடினாயே கண்ணா, பால்வடியும் முகம் என்ற நடனத் தொகுப்பை வழங்கினர்.குருவும் கலை இயக்குநருமான ப்ரீத்தி ரமேஷ் ஹரி நாராயண கௌத்துவம், தொட்டுத் தொட்டு பேசறவன் கண்ணன், மாடு மேய்க்கும் கண்ணா ஆகியவற்றின் தொகுப்பை வழங்கினார். இவை தவிர கணேச அஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், புஷ்பாஞ்சலி ஆகியவற்றையும் வழங்கினர். ஹம்ஸத்வனி ராகம் ஆதிதாளத்தில் கிருஷ்ணனின் புகழ்பாடும் தில்லானா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

ப்ரியா ரவிச்சந்திரன்,
மாசசூஸட்ஸ், பாஸ்டன்

© TamilOnline.com