மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
2016 ஜூன் 4ம் தேதி முதல், ஜூலை 14ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதருகிறார். அரவணைக்கும் ஞானியான அம்மா, மனிதகுலத்திற்கு அயராது சேவை செய்கிறார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார். அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

ஊர்தேதி
சியாடல்06.04 - 06.05
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி06.07 - 06.12
லாஸ் ஏஞ்சலஸ்06.14 - 06.16
சான்ட ஃபே06.18 - 06.22
டாலஸ்06.24 - 06.25
சிகாகோ06.27 - 06.29
நியூயார்க்07.01 - 07.03
பாஸ்டன்07.05 - 07.06
வாஷிங்டன் டி.சி.07.08 - 07.09
டொரன்டோ, கனடா07.11 - 07.14


இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவுப் பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org
வலைமனை: www.amma.org

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com