நெவார்க்: அனுமான் கோவில் ஆண்டுவிழா
2016 ஏப்ரல் 22-24 நாட்களில், கலிஃபோர்னியா மாகாணத்தின் நெவார்க்கிலுள்ள ஸ்ரீ சங்கடமோசன அனுமான் கோவிலின் மூன்றாவது ஆண்டுவிழா பண்டிட் கோவிந்த்ஜி தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்களும் ஸ்ரீஸூக்த ஹோமம், ஸ்ரீராம கோடிபத்ர சமர்ப்பணம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்நடைபெற்றன. கோடிபத்ர சமர்ப்பணம் மாதந்தோறும் புனர்வசு நட்சத்திர தினத்தன்று நடப்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் கலந்துகொண்டு அனுமான் அருளை அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com