செப்டம்பர் 2005: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

5. ஆறுக்கு மேலேயுள்ள சிகரங்களுக்கு அதிபதி (6)
6. சிறையிலிருப்பவன் திரும்ப வியப்படை (2)
7. தேனிசை தொடங்க ஏழு நாட்கள் சிவனைப் போற்றும் நூல் (4)
9. வலியில்லா ஈஸ்வரன் கோவில் மூலவர் நாட்டை ஆள மாட்டார் (4)
10. சமயோசிதமாகக் கோபத்தில் தடுமாறிய ராட்சதர்களின் தலைகளைக் கொய்த உடன் பிறப்பே (4)
12. பானை, பாதிப்பானை, கார்த்திகேயா! (4)
13. இவ்வரம் சந்ததிகள் எல்லோருடைய இறப்பைக் காண வாய்ப்பளிக்கும் (2)
14. வெளியே தெரியாமல் அலை, வேதம் விஜயனின் ஆயுதத்துடன் தொடர்கிறது (2, 4)

நெடுக்காக

1. பாண்டியன் வாலை வெட்டிய குற்றம் (2)
2. கடற்கரையில் புரளும் தேடித் திரியும் (4)
3. டால்ஸ்டாயின் 'கரீனினா' ஒரு வைட்டமின் பழம் (4)
4. அரைக் குடியரசுத் தலைவர் சீர்குலைவை உண்டாக்க வாய்ப்புள்ளது (6)
8. ஒரு போர்த்துகீசியன் சிதைத்த கோஸ் வாட மன்மதனை அழை (6)
11. நரசிம்மனுக்குப் பிறகு வந்த நேரம் (4)
12. இதையே கண்ணாகக் கொண்டால், சாப்பாடு, தூக்கம் வேண்டாமென்பர் (4)
15. பொன்னி பெரிதாக்கு (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

ஆகஸ்டு 2005: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக: 3. பழகு, 5. கால்பந்து, 6. ருசி, 7. அரளி, 8. முகத்திரை, 11. தாம்பாளம், 12. சக்கை, 14. புகா, 16. தரமற்ற, 17. விரல்.
நெடுக்காக: 1. மகாபாரதம், 2. தீபம், 3. பதுக்கல்,4. குரு, 9. திருக்குறள், 10. அளத்தல், 13. எமன், 15. காவி

© TamilOnline.com