ஜோக்கர்


'குக்கூ' என்ற வித்தியாசமான படத்தைத் தந்த ராஜுமுருகனின் அடுத்த படம் ஜோக்கர். 'ஆரண்ய காண்டம்' படத்தில் நடித்த சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி, ரம்யா நடித்திருக்கின்றனர். பிரபல நாடக இயக்குநர், பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எழுத்தாளர்கள் பவா செல்லதுரை, ச. பாலமுருகன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். யுகபாரதியின் பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளனர். "ஓட்டுப் போட்டு அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ள ஒருவருக்கு, அவர்களை டிஸ்மிஸ் செய்யும் உரிமை இல்லையா?" என்ற கேள்வியை மையமாகக் கொண்டு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com