அந்த-மான்
ரிச்சர்ட் நாயகனாகவும், மனோசித்ரா நாயகியாகவும் நடிக்கும் படம் அந்த-மான். வையாபுரி, சாம்ஸ், மன்சூர் அலிகான் மற்றும் பல புது முகங்கள் உடன் நடிக்கின்றனர். இசை: செல்வதாஸ். டி.ஆர்.எஸ். ரமணி ஐயர் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளராக இருந்த ஆதவன் இயக்குகிறார். "பூமியைத் தாயாக நினைக்கும் ஒருவன் அந்த பூமிக்கு எதிரிகளால் பங்கம் வரும்போது என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கரு" என்கிறார் இயக்குநர். காதல் + ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க அந்தமானில் எடுக்கப்பட இருக்கிறது.அரவிந்த்

© TamilOnline.com