எம்.எஸ். அம்மாவுடன் ஒரு சந்திப்பு
கர்நாடக இசைவாணி எம்.எஸ். அம்மாவின் நூற்றாண்டு விழா நடைபெறும் இத்தருணத்தில் குடும்பத்தோடு அவரைச் சந்தித்த நிகழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

Click Here Enlargeஎன் மகள் சங்கீதா கௌசிக் அன்னையர் தினம் அன்று தன் கையால் வரைந்த எம்.எஸ். அம்மாவின் ஓவியத்தை எனக்குப் பரிசாக அளித்தாள். எனக்கு ஒரே சந்தோஷம். சில வருடங்களுக்குப் பிறகு நாங்கள் சென்னைக்குச் சென்றிருந்தோம். பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஹம்ஸா என் அக்கா. அவர் எம்.எஸ். அம்மாவைச் சந்திக்க அவர் வீட்டில் சந்திக்க எங்களுக்கு உதவினார். சந்திப்பு 15 நிமிடம்வரை நீளலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அது ஒருமணி நேரம் நீண்டது! எம்.எஸ். அம்மா, சங்கீதா வரைந்த ஓவியத்தை வாங்கி அதில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்து அவள் நல்ல ஓவியக் கலைஞராக வருவதற்கு ஆசிர்வதித்தார்.

சங்கீதா தற்பொழுது நியூயார்க் நகரத்தில் ஓவியராகப் பணியாற்றி வருகிறாள். கலிஃபோர்னியாவில் பிறந்து வளர்ந்திருந்த அவள் எனக்கு எம்.எஸ். அம்மாமீது இருந்த மரியாதையை நினைவில் கொண்டு, அவரது உருவத்தை வரைந்து கொடுத்ததையும், அம்மாவின் ஆசியையும் என்னால் மறக்க முடியாது.

கல்பகம் கௌசிக்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com