அரோரா: வறியோர்க்கு உணவு
மார்ச் 16, 2016 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இவ்வாண்டின் இரண்டாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506; Web: www.hesedhouse.org) இல்லத்தில் நிகழ்த்தின.

தமிழ்ச்சிறார்கள் அர்செட்டு, ஆதர்சு, இனியா, கீர்த்தனா, சிநேகா, பிரின்டெட், தீப்தி ஆகியோர் தம் பெற்றோர் கனிமொழி, மகேசுவரி, மதுமதி, விசயலட்சுமி, இராசகுமார், ப்ரின்சு, சாக்ரடீசு ஆகியோருடன் இதில் பங்கேற்றனர்.

திருக்குறள் அதிகாரங்கள் நான்கின் விளக்கமும், தமிழர் வசந்தத்தை எங்ஙனம் வரவேற்கின்றோம் என்பதன் விளக்கமும் கூறி, தமிழ்மண்ணின் பெருமையை கூறிச்சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் மெகசுதுமசு, பான் கோன், சிரம்போ, பெரிபுலசு, சுவான் லின், யுவான் சுவாங் போன்றோரின் சிறப்புரைகள் அடங்கிய சிறுதொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டது.

கூடியிருந்த பயனாளிகள் வாழ்த்துகள் வழங்கினர். நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு. தாட்டு அவர்கட்கும் நன்றி கூறிநிகழ்வை முடித்தனர்.

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com