சிகாகோ: எம்.எஸ். நூற்றாண்டு விழா
ஏப்ரல் 17, 2016 அன்று 3.30 மணிக்கு Pfeiffer Hall (North Central college, 310 E, Benton Avenue, Naperville, IL - 60540) அரங்கில் பாரதரத்னா திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிகாகோ சம்ஸ்க்ருதி நிறுவனம் ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் திருமதி எம்.எஸ். அவர்களின் கொள்ளுப்பேத்தி செல்வி. ஐஸ்வர்யா ஸ்ரீநிவாசன், எம்.எஸ். அவர்களால் பிரபலமான பாடல்களை வழங்க உள்ளார். அவருடன் ஜயசங்கர் பாலன் (வயலின்), கல்லிடைக் குறிச்சி சிவகுமார் (மிருதங்கம்) ஆகிய கலைஞர்களும் பங்கேற்பர். இதில் எம்.எஸ். பற்றிய கண்காட்சியும், வீடியோ டாகுமென்டரியும் இடம்பெறும்.

சம்ஸ்க்ருதி நிறுவனத்தின் மூலம் கடந்த இருபது ஆண்டுகளாக நடனமணி ஷோபா நடராஜன் சிகாகோவில் சாஸ்த்ரீய கலைகளான பரதநாட்டியம், குச்சிப்புடி, கர்நாடக இசை, யோகம் ஆகியவற்றைக் கற்பித்து வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு
இணையதளம் - www.samskriti.com
மின்னஞ்சல் - samskriti.info@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com