TNF-ஒஹையோ: ஆதரவாளர்கள் சந்திப்பு
ஏப்ரல் 17, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை, நடுவண் ஒஹையோ கிளையின் (TNF-Central Ohio Chapter) ஆதரவாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் (வெள்ளநிவாரணம், உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவில் கோடைப் பயிற்சி), நடுவண் ஒகையோ கிளையின் செயல்பாடுகளையும் (நாகப்பட்டினத்தில் ABC திட்டம், வரவிருக்கும் வாக்கதான் குறித்த விவரங்கள்) விளக்கும் கூட்டமாக அமையும். இதனுடன், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கை செயல்முறை மற்றும் அறிவியல் கண்காட்சி விவரங்கள் போன்றவை தன்னார்வத் தொண்டர்கள் மூலம் விளக்கப்படும்.

சென்ற ஆண்டு நடந்த வாக்கதான் மூலம் திரட்டப்பட்ட நிதியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக நடத்தப்படும் TNF-ABC திட்டத்திற்கு உதவப்படுகிறது.

நாள்/நேரம்: ஏப்ரல் 17; 2:30 PM - 4:30 PM
இடம்: Northwest Library, 2280 Hard Rd, Columbus, Ohio 43235
தொடர்பு கொள்ள/Contact: tnf.centralohio@gmail.com
இணையதளம்/website: tnfusa.org/chapter/central-ohio

மணி பெரியகருப்பன்,
டப்ளின், ஒஹையோ

© TamilOnline.com