மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: நட்சத்திர இசைக் கொண்டாட்டம்
ஏப்ரல் 17, 2016 ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக, பிரம்மாண்டமான நட்சத்திர இசைக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. வாரன் நகர ஃபிட்ஸ்ஜெரால்டு உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் இந்த 'நீங்கள் கேட்டவை' நிகழ்ச்சி நடைபெறும். பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, சித்ரா, விஜய் பிரகாஷ், பார்வதி, நிகில் மேத்யூ ஆகியோர் பங்கேற்கிறார்கள். இரண்டுமுறை தேசியவிருது பெற்ற கவிஞர் நா. முத்துக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். குழந்தைகளுக்கு childcare வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுக் கடைகளும் உண்டு.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com