டாலஸ்: சித்திரைத் திருவிழா
ஏப்ரல் 16, 2016 அன்று காலை 11 மணிமுதல் பிரம்மாண்டமான இயல், இசை விருந்து படைக்கத் தயாராகி உள்ளது டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம். முதன்முறையாக 100 ஏக்கர் அளவிலான வளாகத்தில் (Southfork Ranch, 3700 Hogge Dr, Allen TX 75002) நடைபெறவிருக்கும் இசைநிகழ்ச்சியில் பாடகர் மனோ, சின்னக்குயில் சித்ரா, விஜய்பிரகாஷ், சூப்பர் சிங்கர் நிகில் மேத்யூ, பார்வதி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பிற்பகல் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் நடைபெறவிருக்கும் பட்டிமன்றத்தில் திருமதி. சுமதி, திரு.மணிகண்டன் பங்குபெறுகிறார்கள். முத்தாய்ப்பாக இரண்டுமுறை தேசியவிருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் சிறப்புரையும், அவரோடு கலந்துரையாடலும் நடைபெற உள்ளன.

சித்ரா மஹேஷ்,
டாலஸ்

© TamilOnline.com