TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நிகழ்ச்சி
பிப்ரவரி 13, 2016 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளை ஆஸ்டின் கிளை , சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் முயற்சிகளின் தொடர்ச்சியாக 'Rebuilding LIfe' என்னும் நாட்டிய நிகழ்ச்சியை லேனியர் உயர்நிலைப்பள்ளியில் நடத்தியது.

நிகழ்ச்சியில் ஆஸ்டினின் முன்னணி நடனப்பள்ளிகளான நாட்யாலயா, பவித்ரம், சாய் நாட்டிய நிகேதன், ஸ்ருஷ்டி நடனக்குழு மற்றும் பல நாட்டியக் கலைமணிகள், மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று நிகழ்ச்சிகளை வழங்கினர்.

தமிழ்நாடு அறக்கட்டளை ஆஸ்டின் கிளையின் நீண்டநாள் உறுப்பினரான சின்ன நடேசன் தமது குடும்பத்தினர் நண்பர்களுடன் வந்திருந்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின்மூலம் திரட்டப்பட்ட $5000 தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு TNF வழியாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

புகைப்படங்கள்: சண்முகசுந்தரம்

© TamilOnline.com