ஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம்
2016 ஏப்ரல் 23-24 தேதிகளில் ஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம் (SSKSS-U.S.A) ஆஸ்டின் மாநகரத்தில் பிரம்மாண்ட யஞ்யங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பை பூஜ்யஸ்ரீ காமாட்சி சுவாமிகள் நிறுவிப் பல சமூகநலப் பணிகளும், தர்ம காரியங்களும் நடத்தி வருகிறார்.

பூர்வாங்கமாக தடைநீ்க்கும் மஹாகணபதி ஹோமம், நோயற்ற வாழ்வைப் பெற ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய ஹோமம், மஹாதன்வந்த்ரி ஹோமம், மஹாசுதர்ஸன ஹோமம், சூர்ய நமஸ்காரம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் போன்ற உன்னதமான ஹோமங்கள் இதன் சிறப்பாகும்.

சென்னை நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் பூஜ்யஸ்ரீ காமாட்சி சுவாமிகள் சேலத்தையடுத்த மேட்டூரில் பிறந்தவர். வேத, சாஸ்திரங்களில் மிகுந்த ஞானம் உடையவர். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 68வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அத்யந்த சிஷ்யராக விளங்கியவர். சுவாமிகள் தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களை ஜாதிமத வேறுபாடின்றிப் போக்கி அருள்பாலிக்கிறார். உபதேசம் செய்து ஆன்மீகப் பாதையில் வழி நடத்துகிறார். “பரந்த மனப்பான்மையுடன் இரு” என்பதே சுவாமிகளின் அறிவுரையாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மதுரமங்லம் அருகில் கண்ணன்தாங்கல் கிராமத்தில் 'மங்களபுரி' என்று பெயரிட்டு சுவாமிகள் ஸ்ரீ ஸ்வர்ண காமாஷி ஆலயத்தை ஸ்தாபித்துள்ளார். மஹரிஷி வேதவியாசர் பிரம்மாண்ட புராணத்தில் விவரித்துள்ள 108 சக்தி பீடங்கள் இத்திருக்கோவிலில் அமையப்போவது சிறப்பம்சமாகும். இதற்கான கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நடக்க இருக்கும் இந்த யஞ்யத்தில் கலந்துகொண்டு உறவினர்கள், நண்பர்களுக்காக சங்கல்பம் செய்துகொண்டு நோயற்ற வாழ்வு வாழ அருள்பெறுமாறு அழைக்கப்படுகின்றனர்.

சுவாமிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 19 முதல் மே 18ம் தேதிவரை விஜயம் செய்யவுள்ள நகரங்கள்: டாலஸ், ஆஸ்டின், ஹூஸ்டன், ஃபீனிக்ஸ், சான் ஃப்ரான்சிஸ்கோ, சியாட்டில், லாஸ் ஏஞ்சலஸ், டெட்ராயிட், டேட்டன், சிகாகோ. அவரது வருகையை ஒட்டி ஹோமம், விளக்குபூஜை, பாதுகை பூஜை, அருள்வாக்கு மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு:
K.G. ஸ்ரீனிவாசன் - 708.848.6064
ராஜ் சப்தரிஷி - 267.278.4058
ராதிகா சந்திரமௌலி - 909.466.4778

ராதிகா சந்திரமௌலி,
ஆஸ்டின், டெக்சஸ்

© TamilOnline.com