டாலஸ்: முத்தமிழ் விழா
ஏப்ரல் 9, 2016 அன்று டாலஸ் தமிழ் மன்றம், மதியம் 2:00 மணிக்கு ஃப்ரிஸ்கோவிலுள்ள லிபர்ட்டி உயர்நிலைப்பள்ளியில் முத்தமிழ் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது. இதில் இயல், இசை, நாடகம் என்ற முக்கனிச் சுவையும் விருந்தாகப் படைக்கப்படும். சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்ச்சி, நம்மைச் சிரிக்கவும், சிந்திக்கவும், செயல்படவும் வைக்கும் பேரா. கு. ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் எனப் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். அனைவரும் வருக.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com