ஃப்ரீமான்ட்: FCAC 22வது புகைப்படக் கண்காட்சி
2016 மார்ச் 5 முதல் ஏப்ரல் 2ம் தேதிவரை Fremont Cultural Arts Council (FCAC) தனது 22வது வருடாந்திர சான்றாயப் புகைப்படக் கண்காட்சியை (Juried Photography Exhibit) ஃப்ரீமான்ட் வாசிகளுக்கென ஃப்ரீமான்ட் முக்கிய நூலகத்தில் நடத்தவுள்ளது. மார்ச் 5ம் தேதி மாலை 6:30 மணிக்குத் தொடக்கவிழா ஃபுகாயா அறையில் நடைபெறும். 6ம் தேதிமுதல் நடுவர்கள் தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் நூலகத்தின் முதல்தளத்தில் முக்கிய மேசைக்குப் பின்னாலுள்ள வாசிப்புப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்படும். இதற்கு வசூலிக்கப்படும் சிறிய நுழைவுக்கட்டணம் வெற்றிபெற்றோருக்குப் பரிசு வழங்கவும், பிற அவசியப் பொருட்களுக்கும் செலவிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு:
கண்காட்சித் தலைவர்: Gregory Smith - 510-828-2893
மின்னஞ்சல்: fcacphotoshow@gmail.com

அனுராதா சுரேஷ்,
FCAC பொது உறுப்பினர்.

© TamilOnline.com