வீர சிவாஜி
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் வீர சிவாஜி. நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். உடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வசனத்தை ஞானகிரி எழுதுகிறார். பாடல்களை யுகபாரதி, கபிலன் எழுத, டி. இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கணேஷ் விநாயக். கதாநாயகன் சிவாஜி ஒரு கால் டாக்சி டிரைவர். பாண்டிச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான ஒரு பயணத்தின்போது நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் படத்தின் கதை என்கிறார் இயக்குநர். சிவாஜி என்றாலே வீரம்தானே!அரவிந்த்

© TamilOnline.com