கேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்
ஜனவரி 2, 2016 அன்று கேட்டி தமிழ் நண்பர்களின் 10ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் Katy-Texas துர்க்காபாரி சொசைட்டியில் நடைபெற்றது. விழாவில் ஆடல், பாடல், குழலிசை, நடனம், நாடகம், ஆடை அணிவகுப்பு எல்லாம் இடம்பெற்றன. விழாத் தலைவர் மாரிமுத்து நடராஜன் மற்றும் தன்னார்வலர்கள் இதனைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். முகப்படம் வரைதல், பலூன் முறுக்கிப் பொம்மை செய்தல், மாயாஜாலம் போன்றவை குழந்தைகளைக் குதூகலப்படுத்தின.

அறுசுவை உணவுக்குப் பின் பின்னக்கிள் ஸ்டுடியோவின் கார்த்திகா மகாதேவன், பரணி கிருஷ்ணா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மெல்லிசைப் பாடல்களால் மதிமயக்கினர். புத்தாண்டு விழாவை 12 மணிவரை கேட்டி தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிவிட்டும் வீடு திரும்பினோம்.

மைதிலி தியாகு,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com